
Rebecca
Feb 16, 2026
உள்ளூர்
25 இந்திய மீனவர்கள் இரு படகுகளுடன் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்படையினர் நேற்றைய தினம் இரவு மேற்கொண்ட விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , காங்கேசன்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகோட்டிகள் உள்ளிட்ட 25 தொழிலாளர்களையும் கடற்படையினர் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 25 பேரையும் அவர்களின் படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த கடற்படையினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






