Search

admin

Jun 7, 2026

உலகம்

சார்தாம் யாத்திரையில் 165 பக்தர்கள் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சார்தாம் யாத்திரையின் போது கடந்த 49 நாட்களில் ஏற்பட்ட பல்வேறு சாலை விபத்துகளில் மொத்தம் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சார்தாம் யாத்திரையின் முக்கிய தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி செல்லும் மலைப்பாதைகளில் ஏற்பட்ட விபத்துகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கேதார்நாத் வழித்தடத்தில் – 80 பேரும்,பத்ரிநாத் வழித்தடத்தில் – 48 பேரும்,யமுனோத்ரி வழித்தடத்தில் – 21 பேர் மற்றும் கங்கோத்ரி வழித்தடத்தில் – 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மலைப்பாதைகளின் சவாலான நிலை, அதிக போக்குவரத்து நெரிசல், மோசமான வானிலை மற்றும் சில இடங்களில் சாரதிகளின் அலட்சியம் போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்கள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், யாத்திரை பாதைகளில் கண்காணிப்பு, அவசரகால மீட்பு வசதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All