
admin
Feb 7, 2026
உள்ளூர்
திட்வா புயலில் பெற்றோரை இழந்துள்ள 103 குழந்தைகள்

திட்வா காரணமாக 103 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுவர்களை பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பிரிதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு பலர் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் சிறுவர்கள் குறித்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி, நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் குறைந்த வயதில் தாய்மையடையும் இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவ்வாறான நிலைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு தேவையான பராமரிப்பை வழங்க உரிய இடமொன்றை இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதுடன் பெற்றோர்களினால் பிள்ளைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






