2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

உள்ளூர்December 3, 2025 · 9 months முன்0
நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது

முதன்முறையாக, பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 சரக்கு விமானம் இன்று (03) மதியம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானம் 9,227 கிலோகிராம் மருந்துகள், உலர் உணவு, நுளம்பு வலைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு உபகரணங்களை குறித்த விமானம் கொண்டு வந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஆண்டிலிப் இலியாஸ், தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்தனர்.