2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

ஐ.ம.ச வேட்பாளருக்கு எதிரான தாக்குதல் முயற்சி : 4 பேர் கைது

உள்ளூர்February 11, 2026 · 6 months முன்2
ஐ.ம.ச வேட்பாளருக்கு எதிரான தாக்குதல் முயற்சி : 4 பேர் கைது

களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 24 வயதுடைய நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் நேற்று பலாங்கொடை பகுதியில் வைத்துப் பிடிபட்டார். 

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் , கடந்த டிசம்பர் மாதம் நாகொடை வைத்தியசாலைக்குள் வைத்து சிறைக்கைதி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தெஹிவளை பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரைப் படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடனும் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது: 

இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் களுத்துறையிலும், ஒரு பெண் பலாங்கொடையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஆண்கள் 23 மற்றும் 24 வயதுடைய களுத்துறைவாசிகள் ஆவர். கைது செய்யப்பட்ட பெண் 23 வயதுடைய பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.