2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு!

உள்ளூர்March 5, 2026 · 5 months முன்1
வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு!

பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச் செயலணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல இன்று (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அவர் தற்போது வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையுடன் இணைக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகவும் செயற்படுவார்.

முக்கிய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பல பொலிஸ் நடவடிக்கைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையேற்று நடத்தியுள்ளார்.

அவரால் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளாக, இந்தோனேசியாவில் வைத்து ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்தமையையும், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவன் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேரை நேபாளத்தில் வைத்துக் கைது செய்தமையையும் சுட்டிக்காட்ட முடியும்.