2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

213 சுகாதார உதவியாளர்களுக்கு நாளை நியமனம்!

உள்ளூர்January 26, 2026 · 7 months முன்1
213 சுகாதார உதவியாளர்களுக்கு நாளை நியமனம்!

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 213 பேருக்கு நாளை (27) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

எவ்வாறாயினும் இது இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 226 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி கிடைத்திருந்த நிலையில், திறந்த போட்டிப் பரீட்சையின் படி தகுதி பெற்ற 246 பேர் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இந்த 213 பேர் அப்பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 2,617 ஆக உள்ளதுடன், 1,906 பேர் தற்போது சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளனர்.