2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இதுவரை 123 பேர் உயிரிழப்பு! பலரை காணவில்லை

BREAKINGஉள்ளூர்November 29, 2025 · 9 months முன்2
இதுவரை 123 பேர் உயிரிழப்பு! பலரை காணவில்லை

இயற்கையின் சீற்றத்தில் சிக்கி இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் 130 பேரை காணவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

மேலும் உயிரிழந்தவர்களில் 51 பேர் கண்டி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், 67 பேர் காணாமல் போயுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர், 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை கேகாலையில் ஒன்பது பேரும், மாத்தளையில் எட்டு பேரும், நுவரெலியாவில் ஆறு பேரும், அம்பாறையில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் 102,877 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

மேலும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 43,925 நபர்கள் 488 பாதுகாப்பு மையங்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் .