2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

உள்ளூர்January 30, 2026 · 7 months முன்2
ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

கரையோர பொலிஸ் பிரிவின் ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர், கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். 

இத்துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. 

அதன்படி, இத்துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளால் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.