2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய கல்வி அமைச்சின் ஊழியர்கள்!

உள்ளூர்January 1, 2026 · 8 months முன்3
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய கல்வி அமைச்சின் ஊழியர்கள்!

2026 புத்தாண்டின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையிலும், புதிய ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.

இதன்போது, ‘டிட்வா’ சூறாவளியினால் உயிரிழந்தவர்கள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த முப்படை வீரர்களை நினைவு கூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதியத்திற்கு, கல்வி அமைச்சின் பதவிநிலை உத்தியோகத்தர்களின் இரண்டு நாள் சம்பளத்தையும், ஏனைய ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தையும் வழங்குவது அடையாள ரீதியாக இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் நாலக கலவெவ ஆகியோர் ஊழியர்களிடையே உரையாற்றி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அமைச்சின் எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒட்டுமொத்த ஊழியர்களினதும் பொறுப்புகள் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சர்வமத வழிபாடுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.