2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : இருவர் காயம்

உள்ளூர்February 27, 2026 · 6 months முன்1
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : இருவர் காயம்

வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன், ஏ 9 வீதியின் போக்குவரத்தும் சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி எருவுடன் பயணித்த பாரவூர்தி ஓமந்தை பகுதியிலே பழுதடைந்திருந்த நிலையில் தரித்து நின்றிருந்தது.

இந்நிலையில் குறித்த பாரவூர்தியினை பழுதுபார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் போது யாழ் நோக்கி பயணித்த பிறிதொரு பாரவூர்தி குறித்த பாரவூர்தியின் பின் மோதியே இவ்விபத்தானது இடம்பெற்றிருந்தது.

மேலும் இவ்விபத்தானது அதிக விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.