2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எல்ல விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

உள்ளூர்September 10, 2025 · 11 months முன்2
எல்ல விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி இரவு, தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏற்றிச் சென்ற பேருந்து சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.