2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

A/L பரீட்சை ஒத்திவைப்பு இல்லை – கல்வி அமைச்சு!

உள்ளூர்June 21, 2026 · 2 months முன்3
A/L பரீட்சை ஒத்திவைப்பு இல்லை – கல்வி அமைச்சு!

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

2026 உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதுமான காலம் உள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அறிக்கையில் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

 

தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரியர் வழிகாட்டிக்கு இணங்க, உயர்தரப் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மேலும், 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, கடந்த பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இந்த முறை பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும் என அந்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அதன்படி, 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குரிய முறையான காலம் கிடைத்துள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் எழவில்லை என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.