2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் மூன்று சீனர்கள் கைது

உள்ளூர்March 26, 2026 · 5 months முன்2
லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் மூன்று சீனர்கள் கைது

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட, ரூ. 1,83,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற மூன்று சீன நாட்டினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் சீன நாட்டு ஓட்டுநர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் அதிகாலை 01.40 மணிக்கு, தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம் FD-140 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.அவர்கள் கொண்டு வந்திருந்த 9 பயணப் பைகளில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 1,20,200 சிகரெட்டுகள் அடங்கிய 601 அட்டைப் பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்திய கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், இந்த சிகரெட் இருப்பைப் பறிமுதல் செய்ததுடன், ஒவ்வொருவருக்கும் முறையே ரூ. 30,000 மற்றும் ரூ. 90,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.