2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

மிதி பலகையில் பயணம் : கீழே விழுந்து ஒருவர் பலி

உள்ளூர்March 12, 2026 · 5 months முன்2
மிதி பலகையில் பயணம் : கீழே விழுந்து ஒருவர் பலி

பேருவளை, மஸ்ஸல பிரதேசத்தில் நேற்று அதிகாலை வேளையில் பேருந்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் ஏறிய இந்த பயணி, பாதுகாப்பற்ற முறையில் அதன் மிதி பலகையில் நின்றுகொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார். 

குறித்த நபர் பேருந்தின் பின்பக்க கதவு வழியாக ஏறி மிதி பலகையிலேயே நின்றுகொண்டிருந்துள்ளார். 

இதன்போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு, மிதி பலகையில் நின்றவாறே பாதுகாப்பற்ற முறையில் பதிலளிக்க முற்பட்ட போதே அவர் இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.