2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மீன்பிடி படகில் கடத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள்

உள்ளூர்March 10, 2026 · 5 months முன்1
மீன்பிடி படகில் கடத்தப்பட்ட  ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள்

நாட்டிற்கு தெற்கே உள்ள கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பல உறைகள் மற்றும் பெருமளவிலான ஆயுதங்கள் கடத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகு மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களை உள்ளடக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சுற்றிவளைப்பும் அதன் ஒரு அங்கமாகவே இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.