2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ADB நிகழ்வில் பிரதமர் உரை.

உள்ளூர்March 10, 2026 · 5 months முன்4
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ADB நிகழ்வில் பிரதமர் உரை.

பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (10) மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் முதன்மை உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுமே இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.

பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நாளை (11) மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.