2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்

உள்ளூர்March 3, 2026 · 6 months முன்1
பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்

இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் செய்தார்.

இதன் போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா,மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும் சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது நீதிமன்ற செயல்பாடுகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.