2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

உள்ளூர்March 3, 2026 · 6 months முன்1
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.