2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியாவில் கைதான பொடி லெசி இன்று இலங்கைக்கு ….

உள்ளூர்February 27, 2026 · 6 months முன்2
இந்தியாவில் கைதான பொடி லெசி இன்று இலங்கைக்கு ….

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். 

பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். 

நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.