2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மன்னாரில் 30 வது நாளாக தொடரும் போராட்டம்.

உள்ளூர்September 1, 2025 · 12 months முன்3
மன்னாரில் 30 வது நாளாக தொடரும் போராட்டம்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 30ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கற் கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 30 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கற்கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்,நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு,அரசே எமது உயிரோடு விளையாடதே,காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே,சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம்”. போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிவாறும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.