2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காணி தகராறு : 67 வயது முதியவர் பலி

உள்ளூர்February 22, 2026 · 8 months முன்3
காணி தகராறு : 67 வயது முதியவர் பலி

மொறவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு உயிரிழந்தவர் மொறவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபராவார். காணித் தகராறு வலுப்பெற்றதன் காரணமாகவே நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பெண் உயிரிழந்த நபரின் மனைவி எனவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 சடலம் பிரேத பரிசோதனைக்காக மொறவக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய 49 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.