கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் இன்று விசாரணை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் இன்று முதல்விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளில் கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறே நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




