2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பல இடங்களுக்கு திடீர் நீர் விநியோகத் தடை

உள்ளூர்February 18, 2026 · 6 months முன்2
பல இடங்களுக்கு திடீர் நீர் விநியோகத் தடை

அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பத்தரமுல்லைப் பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்படுகிறது.

நாளை (19) காலை 6 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.