2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குற்றப்புலனாய்வு விசாரணையில் பெக்கோ சமனின் மனைவி

உள்ளூர்August 30, 2025 · 12 months முன்1
குற்றப்புலனாய்வு விசாரணையில் பெக்கோ சமனின் மனைவி

இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு இந்த விசாரணையை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெண் தனது பிள்ளையுடன் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து நேற்று(29) மாலை 5.50 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமானம் UL 365 மூலம் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் தாம் பெக்கோ சமனின் மனைவி என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.