2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பில் அதிர்ச்சி: உணவக சாப்பாட்டில் பாம்புக்குட்டி

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்3
கொழும்பில் அதிர்ச்சி: உணவக சாப்பாட்டில் பாம்புக்குட்டி

கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு குட்டி ஒன்று இருந்ததாக கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட போது, உணவில் பாம்பு குட்டி போன்ற ஒரு தலைப் பகுதி காணப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை உணவக நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எமது தரப்பிலிருந்து இவ்வாறான ஒரு தவறு நடக்க வாய்ப்பே இல்லை என உணவக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  

மேலும், “சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானவுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உணவகத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த வீடியோவை வெளியிட்டவர் ஒரு சமூக வலைத்தள பிரபலம் எனவும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக திட்டமிட்டு இவ்வாறான செயலைச் செய்திருக்கலாம்” என வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் வீடியோவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.

உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.