2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி பதவியிலிருந்து நீக்கம்!

BREAKINGஉள்ளூர்February 12, 2026 · 6 months முன்2
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி பதவியிலிருந்து நீக்கம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி, அந்தப் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் நேரடி அறிவுறுத்தல்களை மீறி சோஹாரா புகாரி செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, அவர் தனது வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வழங்கியமை கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கட்சி ஒழுக்க விதிகளை மீறியமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் ஊடாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் இறுதி முடிவாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சோஹாரா புகாரியின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து, அவர் மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.