2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

கஸ்ஸப தேரர் உட்பட பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

உள்ளூர்February 11, 2026 · 6 months முன்4
கஸ்ஸப தேரர் உட்பட பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி வண. திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், வண. பலங்கொட கஸ்ஸப தேரர், வண. திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் வண. நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.