2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நீர் வழங்கல் சபையில் பொது முகாமையாளர் கைது

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்2
நீர் வழங்கல் சபையில்  பொது முகாமையாளர் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. 

சபையின் தலைவரின் பாவனைக்காக ஏற்கனவே இரண்டு அரச வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சபையினால் முன்னெடுக்கப்படும் ‘கண்டி வடக்கு – பாததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின்’ ஒப்பந்த நிதியைப் பயன்படுத்தி, டொயோட்டா பிராடோ வகை SUV ஜீப் ஒன்றைக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த வாகனம் எத்தகைய பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமலே, வாடகைக் கட்டணமாகச் சுமார் 12,750,000 ரூபா பணத்தை ‘ஜீ.என். ஒட்டோ ஹோல்டிங்ஸ்’ என்ற நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், குறித்த நிறுவனத்திடமிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, சந்தேகநபர் பெறுகை விதிமுறைகளை மீறிச் செயற்பட்டு, அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.