2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” திறந்து வைப்பு.!

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்2
ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” திறந்து வைப்பு.!

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியின் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (8) சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு, நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன் இணைந்து, தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட நவீன அறிவுத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்குவது காலத்தின் அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இங்கு திறந்து வைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயரில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.