2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்2
பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த குறித்த பேருந்தில், இளைஞன் ஒருவர் மதுபோதையில் பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்துள்ளார். 

இதன்போது, நடத்துனர் அவரைப் பேருந்தில் இருந்து இறங்குமாறு அல்லது பாதுகாப்பாக ஏறிப் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இதனால் நடத்துனருக்கும், மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞன் நடத்துனரைத் தாக்கியுள்ளார். 

இதனைக் கண்ட பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர். 

பின்னர் இது குறித்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் அந்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டார். 

கைது செய்யப்பட்ட இளைஞனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.