2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

கார்டிப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

உலகம்February 9, 2026 · 6 months முன்0

கார்டிப் விமான நிலையத்திற்கு (Cardiff Airport) வேல்ஸ் அரசாங்கம் வழங்கத் திட்டமிட்டுள்ள 205.2 மில்லியன் பவுண்ட் மானியத்தை எதிர்த்து, பிரிஸ்டல் விமான நிலையம் (Bristol Airport) இன்று தீர்ப்பாயத்தில் தனது வாதங்களை முன்வைத்துள்ளது.

பிரிஸ்டல் விமான நிலையத்தின் வழக்கறிஞர்கள், வேல்ஸ் அரசாங்கத்தின் இந்த மானிய அளவு பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்றும், இது வணிகப் போட்டி விதிகளை மீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2013-ஆம் ஆண்டு முதல் வேல்ஸ் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கார்டிப் விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக, 10 ஆண்டு கால முதலீட்டுத் திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தற்காத்துப் பேசியுள்ளது.

இந்த நிலையில் புதிய பராமரிப்பு வசதிகள், விமானங்கள் நிறுத்துமிடம் மற்றும் சரக்கு விமான போக்குவரத்துத் திறனை அதிகரித்தல் போன்ற நோக்கங்களுக்காக 205.2 மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்படும் (10 ஆண்டுகளில் பிரித்து வழங்கப்படும்) என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகளாவிய விமான போக்குவரத்து மையங்களுடன் புதிய வழித்தடங்களை உருவாக்கி, வேல்ஸின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் என்பதும் இதன் பிரதான நோக்கமாக கருதப்படுகிறது.