2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி – முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம்

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்2
கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி – முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேருந்துகள் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும்.

கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு அம்புலன்ஸ் படகும்இ பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒழுங்கமைப்பில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.