2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

பயணப் பையில் 4 கிலோ குஷ் போதைப்பொருள் சந்தேக நபர் கைது

உள்ளூர்February 6, 2026 · 6 months முன்2
பயணப் பையில் 4 கிலோ குஷ் போதைப்பொருள் சந்தேக நபர் கைது

4 கோடியே 64 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டு வந்து, அதனை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட இலங்கை பயணி ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இந்தப் போதைப்பொருள் தொகையைத் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, அபுதாபி நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த பயணப் பையில் 4 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 கிலோ 642 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேக நபரை இன்று (06) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.