2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பெறுமதி வாய்ந்த போதைப்பொருளுடன் பெண் கைது

உள்ளூர்February 6, 2026 · 6 months முன்2
பெறுமதி வாய்ந்த  போதைப்பொருளுடன் பெண் கைது

ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண் வீடமைப்புத் தொகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடொன்றைப் பெற்றுத் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து 17 கிலோ கிராம் ஹேஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 1 கோடியே 50 இலட்சம் (ஒன்றரை கோடி) ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஆவார். அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவருக்கு எதிராக ஏற்கனவே 4 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.