2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

உள்ளூர்February 5, 2026 · 6 months முன்2
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த எச்சரிக்கை மையத்தினால் கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது கடும் மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்கவும்.

வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிப்பகுதிகளில் தங்குவதைத் தவிர்க்கவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தொலைபேசிகள் மற்றும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.