2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய உறுதி

உள்ளூர்February 2, 2026 · 7 months முன்2
விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய உறுதி

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (02) வழமை போன்று தமது கடமைகளை முன்னெடுப்பார்கள் என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன குறிப்பிட்டார். 

கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 

எவ்வாறாயினும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.