2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் : விசேட அறிவிப்பு!

உள்ளூர்January 31, 2026 · 7 months முன்0
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் : விசேட அறிவிப்பு!

2026ஆம் ஆண்டிற்காக துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டிற்காக தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் (31) நிறைவடைவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த திகதிக்குள் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின்படி, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அபராதத் தொகையைச் செலுத்தி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களுக்கும் எதிராக, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.