2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரம் ஒழிக்கப்படும்.

உள்ளூர்August 27, 2025 · 12 months முன்0
ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரம் ஒழிக்கப்படும்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்புகளையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

தேசிய பிக்கு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

– இது தொடர்பில் ஜனாதிபதி தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, ​​முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரச குடியிருப்புகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும்,

புதிய சட்டம் செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டவுடன், பொதுச் சொத்தைக் கொள்ளையிட்டு வீணாக்கும் அரசியல் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒருபோதும் பின்வாங்கப்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் சட்டம் அனைத்து குடிமக்கள் மீதும் சமமாக அமுல்படுத்தப்படும் எனவும், ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.