2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கலந்துரையாடல்

உள்ளூர்January 24, 2026 · 7 months முன்2
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தவிசாளர் நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இக்கலந்துரையாடலின் போது இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

இதேவேளை, தனது X கணக்கில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அது வெற்றிகரமான முடிவை நோக்கி இட்டுச் செல்லும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.