2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

உள்ளூர்January 21, 2026 · 7 months முன்2
இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் நேற்று சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.