2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இருவர் பலி

உள்ளூர்January 15, 2026 · 7 months முன்1
கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இருவர் பலி

கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாவற்குழி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு மிக வேகமாக டிப்பர் வாகனத்தை செலுத்தி வந்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.