2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்.

உள்ளூர்August 27, 2025 · 12 months முன்3
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் இன்று காலை கவனயீர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது நாளான இன்று குறித்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திர்ந்தனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மணி கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட பந்தலை வந்தடைந்திருந்தனர்.

அங்கு பதாதைகளை தாங்கிய வாரும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்து கொண்டிருந்தனர்.