2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புதிய சாதனை நிலைநாட்டியுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை!

உள்ளூர்January 11, 2026 · 7 months முன்1
புதிய சாதனை நிலைநாட்டியுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை!

கடந்த 2025ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அதிகாரசபையின் அதிகாரிகள் 1,20,000 க்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சந்தித்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மின்னணு, டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த 2026ஆம் ஆண்டிலும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை இலக்காகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேலும் விரிவுபடுத்த அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.