2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வீட்டைத் திருத்தும்போது கூரைக்குள் தோட்டாக்கள் அதிர்ச்சி தகவல்

உள்ளூர்January 10, 2026 · 7 months முன்1
வீட்டைத் திருத்தும்போது கூரைக்குள் தோட்டாக்கள் அதிர்ச்சி தகவல்

அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது, கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த 118 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு, இன்று பாணமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

 குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதுடன், தனது சகோதரரிடம் வீட்டைப் பழுதுபார்க்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். இதன்போதே இந்தத் தோட்டாக்கள் சிக்கியுள்ளன. 

 இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார ஆகியோரின் மேற்பார்வையில், பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.