2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே விளக்கமறியலில்.

உள்ளூர்August 26, 2025 · 12 months முன்2
கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே விளக்கமறியலில்.

கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரி உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவின் மனைவி உட்பட 8 பேர் இணைந்து அநுராதபுரம், சிராவஸ்திபுர, திம்பிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டிய சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டார்.

மேலும், கைதுசெய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.