2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கதிர்காம தங்கம் 70% ஏலம் – நாட்டிற்கு நன்கொடை

உள்ளூர்January 2, 2026 · 8 months முன்0
கதிர்காம தங்கம் 70% ஏலம் – நாட்டிற்கு நன்கொடை

ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்புகளில், தெய்வ உருவங்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்களைத் தவிர்ந்த ஏனைய தங்கப் பொருட்களின் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியை “REBUILDING SRI LANKA” நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலம் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தங்கத்தையே முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கதிர்காம பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
“இதற்கான ஆலோசனைகள் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திடம் பெறப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான தங்கத்தை பயன்படுத்தப் போவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை. சமீபத்திய காலத்தில் பக்தர்கள் வழங்கிய தங்கத்தையே அரசாங்கத்திற்கு வழங்க உள்ளோம்” என்றார்.