2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்1
காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு

பதுளை, மடுல்சீமை, மஹதொவ தோட்டப் பகுதியில் உள்ள கால்வாயில் திங்கட்கிழமை மாலை அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடுல்சீமை, மஹதொவ தோட்டப் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதியவர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டப் பகுதியில் இருந்த பிரதேசவாசிகள் சிலர், சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

முதியவர் இறுதியாக அணிந்திருந்த ஆடையை பயன்படுத்தி அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.