2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காலி மாநகர சபையில் பதற்ற நிலை

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்1
காலி மாநகர சபையில் பதற்ற நிலை

காலி மாநகர சபையில் இன்று நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன் சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால், சபையில் அமைதியற்ற சூழல் உருவானது.

இதன்போது “திருடன் திருடன் எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.

மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார். எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறி சென்று உள்ளார்.