2026 September 21, Monday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛈️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
அனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

ரணிலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை.

உள்ளூர்August 25, 2025 · 1 year முன்4
ரணிலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. தயவு செய்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என்று நோர்வேயின் இலங்கையின் சமாதானத்துக்கான முன்னாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

– தனது எக்ஸ் தள பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிடுகையில்,

இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைகின்றேன். தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

விளக்கமறியலின்போது ரணிலின் உடல் நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகின்றோம்.

2022ஆம் ஆண்டில் நாடு பொருளாதார – அரசியல் குழப்பம் அடைந்த போது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தகுதியற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.